பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


5. ஐயறிவுயிர்:

இவைகள் ஐம்புலன்களையும் அநேகமாகப் பயன்படுத்தி, ஆச்சரியமான வாழ்க்கையை வாழ்கின்ற உயிர்கள். தோல், நாக்கு, மூக்கு, கண், இவற்றோடு காதும் சேர்ந்து கொள்கிறது. உலகில் எழும் ஒலிகளை எல்லாம் கேட்டு மகிழ்ந்து, கிளர்ந்து எழுகின்ற இன்பத்தைத் துய்க்கும் பேறு பெற்ற பிறவிகள் இவைகள்.

ஐந்து அறிவுள்ள உயிர்களுக்கு உதாரணம் தருகிற பிங்கல நிகண்டு எழுதிய பிங்கல முனிவர். விலங்குகள் என்கிறார். பிறகு மக்கள் என்கிறார்.

உற்றறி புலனாம் மூக்கொடு கண்செவி
மக்களும் மாவும் ஐயறிவினரே!
(1096)

மிருகங்கள் ஐந்தறிவு உடையன என்பதில் ஏதும் சிறப்பு இல்லை. உண்மைதான். ஆனால் மனிதர்களையும் மிருகங்களுடன் சேர்த்து. ஐந்தறிவுக்குச் சான்றாகச் சொல்லி இருக்கின்றார் என்றால், அன்று சொன்னது இன்றும் உண்மையாக இருப்பதால் தானோ என்னவோ, அவரை மகான் என்று எண்ணத்தோன்றுகிறது. வணங்கத் தூண்டுகிறது.

மக்கள் ஒரு சாரார் விலங்கு போன்றவர்கள். மற்றொரு சாரார் கடவுளரையும் அவர்களை வழிபட்டோரையும் உணர்ந்து வழிபடும் விலங்கு என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இயற்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தேவையானபோது பயன்படுத்திக் கொண்டு, தீமை பயக்கும் என்கிறபோது தொலைதூரம் ஓடி