பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

15


2. ஜீவாத்மாவும் பரமாத்மாவும்

உடல், மனம், ஆத்மா எனும் முக்கோண அமைப்பிலே, நமது தேகம் உருவாகியிருக்கிறது.

தண்ணிர், காற்று, வெப்பம் மூன்றும்தான் தேகத்திற்குத் தெளிவையும், வலிவையும், பொலிவையும், வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஓயாமல் எப்போதும் தகனமாய் தகித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான், நமது உடலுக்குத் தேகம் என்று பெயர்.

தீ அகமாய் உடல் இருப்பதால், தீ அகம் என்று குறிப்பிட்டு, ஒவ்வொருவர் உடலிலும், வெப்பம் 98.4 டிகிரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பர். அது குறைந்தால் ஜன்னி ஏற்படும். மிகுதியானால் காய்ச்சல் வந்து விடும்.

இந்தத் தீயின் அளவு, ஒரு 60 வால்ட் பல்பு எரிகிறபோது ஏற்படுகிற வெப்பத்தின் அளவு. நமது தேகத்தில், சதாகாலமும் இருந்து கொண்டே இருக்கிறது. எரிந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இதை தீ அகம் என்றனர். தீ என்றால் நெருப்பு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் தீ என்றால் அறிவு. இனிமை என்று பல அர்த்தங்கள் உண்டு என்பதையும் அறிந்து மகிழுங்கள்.

தீயானது, உடலில் கட்டுக்கு அடங்கி இருந்தால் அது தீ+அகம். அப்போது அது அறிவு பயக்கும். சுகமாக இனிமை கொடுக்கும். அகமாகவும் இருக்கும். அதை