பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒழுங்காகப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் போனால், அதுவே தீயகமாக மாறிப் போகிறது. தீயகம் என்றால் நரகம் என்று அர்த்தம்.

தீ அகத்தை ஒழுங்காகக் காத்தால், அதுவே தே அகமாக மாறிப் போகிறது. தே என்றால் இனிமை என்று அர்த்தம். தெய்வம் என்று அர்த்தம்.

நலமாகக் காக்கப்படும் நமது உடல், தெய்வம் வாழுகிற ஆலயமாகி விடுகிறது. சுகமான இனிமை தருகிற சொர்க்கமாக மாறிவிடுகிறது.

தேகத்தை ஆட்டிப் படைத்து, ஆதார சுருதியாக விளங்குகிற ஜீவன் இருக்கிறதே! அதைத்தானே நாம் ஆத்மா என்கிறோம். அந்த ஆத்மாவுக்கு இன்னொரு பெயர் தேகி என்பதாகும்.

நமது உடலுக்குச் சரீரம் என்பது மற்றொரு பெயர்.

சரீரம் என்றால், இடைவிடாமல், ஜீரணமாகிக் கொண்டிருக்கிறது என்பது பொருள்.

நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களையெல்லாம் ஜீரணம் செய்வது சரீரம் தான்.

இந்த சரீரத்தின் சக்தியை வளர்த்து. சாரமாகப் பணியாற்றும் மனதின் வல்லமையையும் வளர்த்து விடுகிற ஜீவனான, ஆத்மாவான தேகியான ஆன்மா இருக்கிறதே. அதற்கு சரீரீ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

உடலுக்கு மேலும் ஒரு பெயர் ஆக்கை. அதாவது யாக்கை என்றும் சொல்வார்கள்.