பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இப்படி அமையப் பெற்றதெல்லாம். இனிமையாக, ஏற்றமிகு மனிதர்களாக வாழ வேண்டும். எல்லோரும் என்பதற்காகவே.

நம் உடலை மெய் என்றனர். பொய்யென்று அமங்கலமாகப் பேசக்கூடாது என்பதற்காக மெய் என்று கூறவில்லை. உலகின் உண்மையானது உடம்பு என்பதை உறுதிப்படுத்தவே!

உடலின் அமைப்பு இயற்கை போல, இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.

பூமியாய் சுமக்கும் பாதங்கள். நீராய் சுரக்கும் வயிற்றுப் பகுதி, நெருப்பாய் தகிக்கும் நெஞ்சுப் பகுதி, காற்றாய் நடக்கும் தொண்டைக் குழி, வானமாய் நிற்கும் தலைப்பரப்பு.

இப்படி இயற்கையோடு தொடர்புடைய நமது தேகத்தை இயக்குவது. மயக்குவது, நிரப்புவது, நடமாட வைப்பது எல்லாம் காற்றுதான்.

காற்றுதான் அனைத்துக்கும் காரணமாக, காரியமாக விளங்குகிறது.

காற்று (Air) என்பது பலவகைப் பிரிவுக் காற்றுகளால் கலந்து கிடக்கிறது. இந்த உலகச் சுற்றுப்புற சூழ்நிலையில் 5000 மில்லியன் டன்கள் இருக்கிறது காற்று என்று கணக்கிட்டிருக்கின்றனர் வல்லுநர்கள்.

நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, ஹீலியம், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், சீனன் எனப் பலவகை காற்றுகளுடன், 20.95 சதவிகித அளவு பிராண