பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

21


வாயு அதாவது ஆக்சிஜன் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் விவரமாகக் கணித்திருக்கின்றார்கள்.

காற்றுதான் எல்லாமே என்று கூறினோம் அல்லவா! ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்ற இரண்டு காற்றும் இணைந்ததால் தான் தண்ணீர் உண்டாயிற்று என்பார்கள்.

காற்றும் அனலாகிய வெப்பமும் சேர்ந்துதான் தீயாகிறது என்பார்கள்.

பூமிக்குள்ளும், வான வெளி முழுவதும் காற்றுதான் சூழ்ந்து இருக்கிறது; ஆண்டு கொண்டிருக்கிறது.

ஆக, காற்றுதான் எல்லாமும் எங்கேயும் என்பதால், காற்றே வாழ்க்கையின் ஊற்று என்று பிரமிப்புடன் புகழப்படுகிறது.

காற்றின் நிறம் கருமை என்பார்கள்.

நீரின் நிறம் வெண்மை என்பார்கள்.

நெருப்பின் நிறம் செம்மை என்பார்கள். (செந்நிறம்)

வானத்தின் நிறம் புகைமை என்பார்கள்.

இந்த நிறக் குணங்கள் எல்லாம். நம் உடலோடு ஒத்துப் போகின்ற அற்புதத்தையும் நாம் அறிந்து மகிழ்வோமாக.

காற்றிற்கு என்று எண்ணிலடங்காப் பெயர்கள் உண்டு. அதற்குள்ள அத்தனைப் பெயர்களிலும், அனைவராலும் மரியாதையுடனும், பயபக்தியுடனும் பேசப்படுகின்ற ஒரு பெயர் ஆத்மா என்பது.