பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போடுகின்றார்களே! அது சரிதானா என்று நாம் சிந்தித்தால் துன்பம் தருவது, 'பிற சமுதாயத்தினர் அல்ல; அவரவர் சாதி சனம்தான், என்று சித்தர் ஒருவர் பாடுகிறார் என்றால் அது அவர் அனுபவித்தத் துன்பமா? கேட்டுத் தெரிந்த கொண்ட துன்பமா?

“நம் சனம் சூழ்ந்தக்கால் நாடும் பிணியாகும். நீடும் கலை, கல்வி, நீள்மேதை, கூர்ஞானம், பீடு எல்லாம் வாயா” என்கிறார் திருமூலர். வாயா என்றால் கிட்டாது என்பது பொருள்.

நம் சனம் என்றால், சொந்தக்காரர்கள் என்று அர்த்தம். சொந்தம் சேர்ந்தால் என்ன ஆகும்?

குற்றமே செய்யும் சுற்றம் என்பதால்தான். குற்றம் பார்க்கில் சுற்றமில்லை என்பார்கள்.

ஏன் சுற்றம் குற்றம் செய்கிறது என்றால், அவர்கள் கலங்கிய மனம் கொண்டவர்களாக இருப்பதால்தான்.

மனம் கலங்கி விட்டால், மார்க்கமும் கலங்கும். வாழ்க்கையும் கலங்கும்.

ஆகவே, அந்த மனத்தை அழகாக, தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அதைக் குறிக்கின்ற சொல்லை, அகம் என்று அருமையாகப் பெயரிட்டனர்.

மன் என்றால் சிந்தித்தல் என்றும்; அம் என்றால் அழகு என்றும் நீர் என்றும் அர்த்தம்.

சிந்திக்கின்ற செயலைக் கொண்டதுதான் மனம் அதற்காக கண்டதையெல்லாம் சிந்திக்கக் கூடாது