பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

29


மனதுக்குப் பலப்பல சிந்தனைகள். பலான சிந்தனைகள் நிறைய உண்டு. நிறையவே உண்டு.

கோபம், ஆசை, அசட்டைத்தனம், உலோபகுணம், மயக்கம், செறுக்கு, அகந்தை, பொறாமை போல பல கெடுமதிகள் உண்டு.

அப்படியெல்லாம்மாறாகச் சிந்தித்தால்,உடல்நலம் கெடும். மனவளம் என்ற ஒரு மகிமையான சொல்லால் குறித்தனர்.

அழகாகச் சிந்திப்பதற்குத்தான் மனம் என்று பெயர். அதிலும் நீரோட்டம் போல சிந்தனை வேண்டும் என்று அதற்குள்ளே குறிப்பும் தந்தார்கள்.

நீரோட்டம் என்றால், தங்கு தடையில்லாமல், தெளிவாக ஓடுகிற நீருக்குப் பெயர்.

நீரோட்டம் என்றால் மணியின் உள்ளொலி என்றும் ஒரு பொருள் உண்டு. மணியின் ஓசை காதுக்கு இன்பமாக இருக்கும். அதுவும், உள்ளேயிருந்து வருகிற மெல்லிய ஓசை, செவிக்குப் பதமாகவும் இருக்கும். மனதுக்கு இதமாகவும் இருக்கும்.

ஆகவேதான், மனம்போல வாழ்வு உண்டாகும் என்று மறைபோல, அதைக் குறித்துச் சென்றார்கள்.

அகம் என்ற இந்தச் சொல். இன்னும் கொஞ்சம் ஆழமான பொருளை உடையதாக அமைந்திருக்கிறது.

அ+கம் என்று பிரிக்கலாம் இந்தச் சொல்லை ‘அ’ என்றால் அகச்சுட்டு, புறச்சுட்டு.