பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


புதிய செல்களாக வந்து தோலின் பாரம்பரியத் தன்மையைப் புதுப்பித்துக் கொள்வதும் அன்றாடம் நடைபெறுகிற ஆச்சர்யமான காரியமாகும்.

இந்த மேற்புறத் தோலிலே. உள்ள கெராட்டின் (Kerotene) எனும் கெட்டியான உயிர்ச்சத்துப் பொருளால்தான். வெளிப்புறத் தோலில் மேலே முடிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கெராட்டின் சத்துதான் தோலைப் புதுப்பித்து ஈரப்பதத்தைக் காத்துக் கொண்டும் பணியாற்றி வருகிறது.

கெராட்டின் சத்துப் பொருள்தான், தோலை கடுமையானதாக உருவாக்கி உள்ளேயிருக்கும் இரத்தக் குழாய்கள், நரம்புகள், எலும்புகள் போன்றவற்றைக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காலின் உள்ளங்கால் தோலினைக் (Soles) கூறலாம்.

மேற்புறத்தோலில் சிறுசிறு நுண்துளைகள் உண்டு. இவற்றை மயிர்க்கண் என்றும் கூறுவார்கள். உடம்பின் உள்ளேயிருந்து ஊறி வருகின்ற வியர்வை போன்ற திரவத்தை வெளியேற்ற உதவுகின்ற வடிகாலாகவே இவை அமைந்திருக்கின்றன.

2. உட்புறத்தோல்:

உட்புறத்தோல் அமைப்பை ஆங்கிலத்தில் Dermis என்பார்கள். இதில்தான் இரத்தத் தந்துகிகள். அதாவது சிறுசிறு நுண்மையான இரத்தக் குழாய்கள் இருந்து தோலுக்கு இரத்தத்தை ஏந்திக் கொண்டு வருகின்றன. இந்தப் பரப்பில்தான் நரம்புகளும் இருக்கின்றன.