பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

39


இந்த நரம்புகள், வெளிப்புறத்தால் ஏற்படுகின்ற உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கின்றன. வெளியுலகில் ஏற்படுகிற வெப்பம் குளிர்; உடலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு படு உணர்வு. வலி, வேதனை, இதம் போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கின்றன.

இந்த உட்புறத்தோலின் பரப்புகளில்தான் வியர்வைச் சுரப்பிகள் தோலுக்கு அடியில் இருக்கின்றன. அங்கே, முடி முளைக்கின்றன மூட்டுப் பைகளும் (Follicles) உண்டு.

இதற்கும் கீழே கொழுப்புச் சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றை மயிர்ப்பை நெய்மச் சுரப்பி (Sebaceous glands) என்பார்கள். இச் சுரப்பிகள் எண்ணெய் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அது மயிர்களுக்கும் தோலுக்கும் உதவும் வகையில் அமைந்து தோலின் மென்மைக்கும், நெகிழ்வுத் தன்மைக்கும் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றுகின்றன.

3. அடிப்புறத்தோல்:

அடிப்புறத்தோல் பகுதியானது. கொழுப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொழுப்புப் பொருளானது தசைகளுக்கும், எலும்புகளுக்கும், மற்றும் உள்ளுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றது.

இதுவே உடம்பை வெப்பமுள்ளதாக வைத்திருக்க உதவுகிறது. தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பானது