பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

41


5. முக அழகு மூன்று விதம்

ஒவ்வொருவர் உடலின் உள்ளேயும் 37 டிகிரி செல்சியஸ் அளவு உஷணம் வியாபித்துக் கிடக்கிறது.

அந்த அளவு உஷணம் அதிகமாகிப் போனாலும். அல்லது குறைந்து போனாலும், உடல் தனக்குரிய உன்னதமான பணியை செய்ய முடியாமல் திணறிப் போய்விடும். அந்தத் திணறலுக்குப் பெயர்தான் வியாதி. நோய்.

நோய் என்றால் என்ன பொருள்?

மனதின் ஆசைக்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல், உடல் ஸ்டிரைக் செய்கிறது. அதாவது வேலைநிறுத்தத்தை மேற்கொள்கிறது என்பதே அர்த்தம்.

ஆகவேதான். ஒழுக்கத்துடன் வாழ்கிற ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும், என்ற கட்டாயத்திற்கு அனைத்து மனிதர்களும் ஆட்பட்டிருக்கின்றார்கள்.

அந்த உஷ்ணத்தின் அளவு காக்கும் அற்புதக் காரியத்தைத்தான், தோல் எனும் உறுப்பு. சீராகச் செய்து காக்கிறது.

சுற்றுப்புறம் குளிராக இருக்கிறபோது. தோல் பகுதியானது உடல் மேற்பகுதியில் சிறு புடைப்பை (Bump) உண்டுபண்ணி விடுகிறது. அப்பொழுது, தோலின் மேற்புறத்தில் இருக்கின்ற முடிகள் எல்லாம் நிலைக்குத்தி நின்று, தோலுக்கடியில் உள்ள காற்றை