பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடலானது வெப்பப்படுத்திவிட அதுவே குளிரிலிருந்து காத்து வெப்பப்படுத்துகிறது.

தோலுக்கு அடியில் உள்ள இரத்தக் குழாய்கள் இறுக்கம் பெற்று. இரத்தமானது வெப்பத்தை இழந்து போகாமல் காக்கிறது.

அதேபோல் உடலானது வெப்பத்தில் இருக்கிற சமயத்தில், இரத்தக் குழாய்கள் விரிவடைந்து கொண்டு. வெப்பத்தை வெளியேற்றுவதால் வியர்வை ஏற்பட்டு தோலின் நுண்மையான துவாரங்கள் வழியே வெளியேற்றி. வெப்பத்தைக் குறைத்து விடுகிறது.

இதுதான் தோலானது தேகத்திற்குச் செய்கிற பாதுகாப்புப் பணிகள் ஆகும். இந்த முறைதான் முகத்திற்கும் பொருந்தும் என்பதால்தான். தோலின் மகிமையை மேலும் விரிவாக இங்கே குறித்துக் காட்டினோம்.

ஒவ்வொருவரின் உடல் நலத்திற்காகவும். தோலானது மிகவும் சிரத்தையுடன் மிகுந்த சிரமத்துடன் செயலாற்றி வருகிறது என்று முன்னரே கூறியிருந்ததை இங்கே நினைவு படுத்துகிறோம்.

ஆகவே, உங்கள் கடமை என்னவென்று யோசித்தால், அந்த அற்புதப் படைப்பான தோல் பகுதியை ஆர்வத்துடன் பார்த்துக் கொள்வதும் தலையாய கடமை என்றே தோன்றிவிடும்!

தோலின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாத்துக் கொண்டு பராமரிப்பது அன்றாடம் செய்ய வேண்டிய அவசியப் பணியாகும்.