பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

45


இப்போது நாம் மொத்தமாக முக அழகு பற்றி பார்ப்போம்.

முகப் பகுதியில் உள்ள தோலானது மென்மையானது. நுண்மைத் தன்மை கொண்டது என்று கூறினோம் அல்லவா!

அந்தத் தோல் பகுதியானது சீக்கிரமாக உலர்ந்து போய் விடும். ஏனென்றால் முகமானது மறைக்கப்படாமல் முழுநாளும் வெளியிலும் வெய்யிலிலும் காய்கிறதல்லவா!

ஆகவே, முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் கழுவிக் கொள்வது சிறந்தது. இரண்டு முறைக்கு மேல் என்றால் அவ்வளவு நல்லதல்ல என்பது உடற்கூறு வல்லுநர்களின் அபிப்பிராயமாகும்.

முகப்பகுதியை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பதற்கு முன்பாக, முகத்தை மூடிய தோல் பகுதியானது மூன்று விதமாக அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

எப்படி மூன்று பிரிவாக பிரிந்து கொள்கிறது. என்றால், முகத்திலே தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் எந்த அளவுக்குச் சுரக்கிறதோ அந்த அளவுக்குத்தான் முகத்தின் தோல் அமைந்திருக்கும்.

காக்கும் சுரப்பிகளின் பெயர் மயிர்ப்பை கொழுப்புச் சுரப்பி (Sebaceous Glands) அதாவது தோலுக்கு அடியில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட சில தோல் சுரப்பிகள். அவை சுரக்கின்ற சுரப்பானது கொழுப்பு போன்ற திரவம்.