பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. முகப் பிரச்சினைகள்

முகத்தை மூடியுள்ளதோலின் செழிப்பும் சிறப்பும் தான், முக அழகாக வெளிப்படுகிறது. இங்கே முகத்தோல் பிரச்சினை என்று கூறலாம். முகப் பிரச்சினை என்று கூறுவதே, அந்த காரணத்தினால்தான்.

முகத்தோலில் தோன்றுவன எல்லாம். சிறுசிறு குழப்பம் தானே தவிர நிலையாக நின்று விடுகிற குறைகள் அல்ல. அவற்றில் இயல்பாகத் தோன்றுகிற குறைகளை மட்டும் இங்கே எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

1. முகப்பரு (Pimples)
2. தோல் படைகள் (Black Heads)
3. கொழுப்புச் சுரப்பிக் கட்டி (ACne)
4. வெப்பக் கடுமையும் கருமையும் (Sun Heat)
5. வியர்வைக்கோளாறு (Sweat Problems)
6. கரும்பொட்டுக்கள் (Black Spots)
7. தேமல் (Freckles)


1. முகப்பரு (Pimples):

மென்மையான, அழகான, கவர்ச்சியான தோலானது. முகத்தில் இயற்கையாய் அமைவது என்பது மிக அதிசயமான சமாசாரம் தான். அதிலும், எல்லா நேரங்களிலும் அவ்வாறு முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்வதும் கஷ்டமான காரியம் தான்.