பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

49


ஆக, முகத்தின் சருமமானது. எப்படி அமைந்தாலும், நாம் கவலைப் படவேண்டிய அவசியமேயில்லை. அது தேவையுமில்லை. கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் தேவைக் கேற்ப அமைத்துக் கொள்வது தான், மனிதர்களின் மாண்பு மிகு பணியாகும்.

உடம்பு என்றால் வருந்துதல் என்பதுதான் அர்த்தம். வருந்துவதற்கும், வருத்துவதற்கும் தான் உடம்பு வந்திருக்கிறது என்றால். வருகிற பிரச்சினைகளைப் பற்றி அஞ்சுவது பேதமை. ஓடி ஒளிவது கோழைத்தனம். அழுது துடிப்பது அறிவில்லாத மூடத்தனம்.

வாழ்க்கை என்பது ஒரு குத்துச் சண்டை மேடையைப் போல. குத்துச் சண்டை மேடையேறி விட்டு, எதிரே நிற்கும் எதிராளியிடம் கைகுலுக்கி விட்டு. சண்டை போடாமல் இருக்க முடியுமா?

எதிராளியைக் குத்த வேண்டும். எதிராளி குத்துகின்ற தாக்குதலை சமாளிக்க வேண்டும். இதற்கும் மேலே எந்த வழியும் கிடையாது. குத்துக்களை சமாளிப்பதற்காக ஒதுங்கிக் கொள்ளலாம். ஓரடி ஈரடி ஓடிக் கொள்ளலாம். ஓடிப் பதுங்கிக் கொள்ள முடியுமா? தப்பித்து மேடையை விட்டு இறங்கி ஓடிவிட முடியுமா?

அதுபோல் தான் வாழ்க்கைப் பிரச்சினையும். பிரச்சினையை விரட்ட மேற்கொள்ள வேண்டும்.

முகத்திற்குப் பொலிவும், தெளிவும் தருவது, சுத்தமாக இருப்பதும், கறை எதுவும் இல்லாத சரும அமைப்புதான்.