பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பொதுவாக முக அழகு பாதிக்கப்படுவது வளரும் பருவமாகிய பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள பருவமே.

இந்த வயதிலே, உடலில் வளர்ச்சி மட்டுமல்ல; உடலுக்குள்ளே மலர்ச்சியும். எழுச்சியும் கிளர்ச்சியும் கூடி வருவதுதான்.

சிறுமிகளுக்கு மாதவிடாய் இயக்கி நீராக உள்ள புரோஜெஸ்டிரோன் (Progesterone); சிறுவர்களுக்கு இனக்கீற்றை ஏற்படுத்தும் நடுநாயக ஆண்பால் கூறு என்று கூறப்படுகிற டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) எனும் இந்த இரண்டு இயக்கிகளும். (Harmones) மற்ற சுரப்பிகளை விட அதிகமாக இயங்கி, உடல் மாற்றத்திற்கேற்ப செயல்பட்டு விடுவதால். அந்தப் பருவ உடலும் மலர்ச்சி பெறுவதால்தான். முகத்தில் பாதிப்புகள் நேர்ந்து விடுகின்றன.

இந்த வளர் பருவத்தில். இனி உணர்வுதரும் இயக்கி நீர்கள் அதிகமாக சுரந்து கொள்வதால். அவை விரைந்து சென்று உடலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகளை உசுப்பி விடுகின்றன. அந்தக் கொழுப்புச் சுரப்பிகளும். கொழுப்பு நீர்மத்தை (Sebum) தோலுக்கு அடியில் அதிகமாக சுரந்து விடுகின்றன.

தேவைக்கு அதிகமாக கொழுப்பு நீர்மம். தோலுக்கடியில் உற்பத்தி செய்யப்படுவதால். முகத்தோலில் உள்ள நுண்ணிய ஓட்டைகள் (Pores) அடைப்பட்டுப் போவதால் அங்கே குமிழ் களாக முகப்பருக்கள் தோன்றிவிடுகின்றன.