பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

51


வளர்வதிலே ஏற்படுகின்ற முக்கியப் பிரச்சினை முகப்பருக்கள்தான். இதைத் தடுக்க முடியுமா? வராமல் நிறுத்த முடியுமா என்றால் முடியும். நிச்சயமாக முடியும். முகப்பரு நிறைய ஏற்படுவதை குறைத்துக் கொள்ளவாவது முடியுமா என்றால். அதுவும் எளிதுதான்.

1. உங்கள் முகத்தில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

2. முகத்தில் தூசி ஒட்டாமல் அழுக்குப் படியாமல் குறைந்தது 2 முறையாவது தண்ணீரில் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

3. முகத்தைக் கழுவுகிற உங்கள் கைகளும் சுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கைகளை அடிக்கடி கழுவி. சுத்தமாய் வைத்திருப்பது. நோய் தடுப்பு முறைகளில் முன்னோடி செயலாக இருக்கிறது.

4. உங்கள் முகத்தின் தோலானது மென்மையானது. தொட்டால் சுருங்கிபோல. மிகவும் உணர்வுடையது (Delicate) மற்ற உறுப்புக்களைப் போர்த்தியிருக்கும் சருமத்தைவிட முகத்தின் சருமம் மிருதுவானது என்பதால் பதமாகச் செய்ய வேண்டும்.

5. உங்கள் முக சருமம் வெளியில் அடிக்கும் வெயில் வெப்பத்தால், விரைவில் காய்ந்து போகும். வீசுகிற காற்றால் மேலும் உலர்ந்து போகும். ஆகையால்தான் இரண்டு முறையாவது முகத்தை நல்ல தண்ணீரால்