பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கழுவிட வேண்டும் என்கிறோம். பல தடவை முகம் அலம்பினால் என்ன என்று கேட்கலாம்.

அப்படிச் செய்தால் முக சருமம் உறுத்தலுக்கு ஆளாகி, மேலும் பல பிரச்சினைகளை பிறப்பித்து விடும்.

6. முகத்தில் முளைத்து வந்துள்ள முகப்பருவை, நீங்கள் கிள்ளிவிடுவதும், பிசைந்து அழுத்திவிடுவதும், அந்த முளையை அகற்றி விடுவதற்கு முயற்சிப்பதும் கூடாது. அப்படிச் செய்தால் பருவின் நீர்ப்பட்டு. பக்கத்து பகுதிகளுக்கும் பரவும். அங்கே கருமை மிகுந்த கருமையான வடுவையும் உண்டாக்கி விடும். முகப் பருவை நகத்தால் கிள்ளுவது மிகமிகத் தவறாகும்.

7. அப்படி ஏதாவது தடவவும், அழுத்தவும் முயற்சித்தால் அழுக்கான கைகளை வைக்காமல் சுத்தப்படுத்தப்பட்ட விரல்களைப் பயன்படுத்தலாம்.

8. கடைகளில் ஏராளமான மருந்துகள். இதற்காக விற்பனையில் விடப்பட்டுள்ளன. நீங்களே போய் வாங்கி முகத்தில் பூசிக் கொள்வது புண்ணுக்கு மருந்து போடப் போய். புண்ணையே மேலும் புண்ணாக்கி விடுகின்ற செயலாக அமைந்துவிடும்.

கடுமையான காரம் நிறைந்த முகப்பருவைக் கழுவும் திரவம் (Lotion) அல்லது (பாலேடுபோல் தோன்றும் மருந்து) பாலேடு மருந்து (Cream) போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் முகப் பரு மறையாமல் போவதுடன் முக சருமம் தடித்தும் கருத்தும் போய்விடுகிறது.