பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சுரப்பிகளால் சுரக்கப்படும் எண்ணெய் பசையின் மேலே வெளிப் புறத்திலுள்ள அழுக்கு, தூசி, மற்றும் சூரிய வெப்பத்தாக்குதல் பட்டு அதன் காரணங்களாலேயே அது கருமை அடைந்து விடுகிறது.

இதைப் போலவே வெள்ளைப் படையும் ஆகும். முகத்தில் ஏற்படுகிற வியர்வைச் சுரப்பியினால். அவை வெளிப்புறத்திலே உற்பத்தியாகி. அங்கே அழுத்தம் கொடுப்பதால் மொத்தமான கட்டியாக மாறிவிடுகிறது. படையானது சீபத்தால் ஏற்படுகிற எண்ணைப் பசை என்றாலும் அதில் மாற்றம் எதுவுமின்றி வெளியே வராததால் அது உள்ளுக்குள்ளேயே அழுக்கினால் மூடப்பட்டு முகத்தின் தோலுக்கு அடியில் ஒரு விதத்தில் வந்து பெரிய கட்டியாக அமைந்து விடுகிறது.

முகத்திலே உள்ள தோலின் நுண் துவாரங்கள் அடைபட்டுப் போவதால்தான் உள்ளேயே பெருகிவருகிற கொழுப்பு திரவம் போன்ற எண்ணெய் பசை அடைத்துக் கொண்டு துவாரத்தின் வழியே வெளியே வர முடியாமல் திடமாக மாறிவிடுகிறது.

இந்த விதமான கட்டிகளை அகற்ற, கிண்ணத்தில் வெந்நீர் வைத்துக் கொண்டு அதன் மேல்புறமாக சுமார் 3 அடி உயரத்தில் இருந்துதலையை மூடி முகத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்தால் அந்த அடைபட்ட நுண்துவாரங்கள் நீக்கப்படுகின்றன. இந்த முறையைத் தவிர, மேலும் ஒரு நல்ல மருத்துவரை அணுகி நல்ல முறையில் தெரிந்து கொண்டு. சிகிச்சை பெறுவது நலம்.