பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கட்டிகள் முகத்தின் மேலாக வடுக்களாகவே இருந்து விடுகின்றன.

வெள்ளை நிறமுள்ள (தோலில்) பருவ இளைஞர்களுக்கும், பருவப் பெண்களுக்கும் தான் இப்படி முகக் கட்டிகள் வருகின்றன என்பதற்கும் காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் அந்த டீன் ஏஜ் பருவத்திலே ஏற்படுகின்ற உள மாற்றம். மன எழுச்சி. மன அழுத்தம் மற்றும் உடல் வளர்ச்சியின் காரணமாக உணவு முறை. சுகாதாரப் பழக்க வழக்கங்கள். வித்தியாசமாகப் பின்பற்றப்படுவதால் இப்படி முகக் கட்டிகள் ஏற்படுகின்றன.

கடுமையாகப் பாதிக்கின்ற சுரப்பிக் கட்டிகளுக்கு மருத்துவர் மூலம்தான் வைத்தியம் பெற வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் இந்தக் கட்டிகளின் தாகத்தை தடுத்து நிறுத்த உதவும். இனிப்புப் பண்டங்கள். வெண்ணெய். எண்ணெயில் வறுத்த பதார்த்தங்கள் போன்றவைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். முகத்திலே எண்ணைப் பசை அதிகமுள்ள கிரீம்களைத் தவிர்த்தல் நல்லது. பாதிக்கப்பட்ட முகப் பகுதியை மிகவும் நிதானமாக சுத்தப்படுத்த வேண்டும். கட்டிகளுக்கு எரிச்சல் ஏற்படாத வண்ணம் காரியங்களைச் செய்வது நல்லது. இதற்குத் தீர்வாக (Anti-Biotic Tablets) உயிர்க்கொல்லி மாத்திரைகள், மருந்துகள், நுண்கிருமிகளை அழிக்கும் உயிர்க் கொல் லி மாத்திரைகள் இவையெல்லாம் கட்டிகளை உற்பத்தி செய்கிற பாக்டீரியாக்களைத் தடுத்து அதன் விளைவுகளை அடக்க உதவிசெய்யும்.