பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வரையிலும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கீழே மண்தரையும் சுடு தண்ணீரும் மற்றும் இயற்கைப் பொருள்களும் சூரியனின் வெம்மையை அதிகமாகவே பரப்பி விடுகின்றன.

ஆகவே சூரிய வெப்பக் கதிரை நம்மேல் அதிகம் படாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

சிலருக்கு கடுமையான வெப்பம் காரணமாக தோலிலே சுருக்கம் ஏற்பட்டு வயதுக்கு மீறிய தோற்றத்தையும் அளித்துவிடும்.

5. வியர்வை கோளாறுகள் (Sweat Problems)

உடலில் வியர்ப்பது என்பது. உஷ்ணமான உடம்பைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக இயற்கையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஒரு இனிய செயல் முறையாகும். ஒவ்வொருவர் உடம்பிலும். 2½ மில்லியன் வியர்வை சுரப்பிகள் தோலுக்கு அடியிலே ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

உங்கள் அக்குள் (Armpit) பகுதியில் பெரிய பெரிய வியற்வைச் சுரப்பிகள் உருவாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் உடம்பு முழுவதும் வேர்க்கின்ற வேர்வையை விட அக்குள் பகுதியில் அதிகமாக வேர்க்கிறது.

வியர்வையைப்பற்றி ஆச்சர்யமான ஒரு விஷயம். வியர்வைக்கு, நாற்றமோ, துருவாசமோ எந்தவிதமான கெட்ட வாடையோ கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால், வந்த வேர்வையைத் துடைக்காமல்