பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

67


8. முக அழகைக் கூட்டும் முக்கிய உறுப்புகள்

அழகாக வைத்துக் கொள்ள வேண்டியது முகத்தை மட்டும் அல்ல. உங்கள் முகத்திலே அமைந்துள்ள. முதன்மை உறுப்புக்களும் முக்கியமானவை.

1. முடிகள் 2. விழிகள் 3. செவிகள் 4. பற்கள் இவற்றையெல்லாம் நீங்கள் சீராகவும் சிறப்பாகவும் வைத்துக் கொள்கிறபோதுதான், முகமானது பளபளக்கும். பளிச்செனத் தெரியும்.

1. முடிகள்:

முதலில் முடியைப் பற்றி இனித் தெரிந்து கொள்வோம். உங்கள் முகத்திற்கு வசீகரமான ஒரு வனப்பையும். கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தையும் கொடுப்பது முடிதான். மொட்டைத் தலையாய் இருக்கும் முகத்தைப் பாருங்கள். சொட்டைத் தலையுடன் இருக்கும் முகத்தைப் பாருங்கள். அலை அலையாக நெளிந்து கருமையாகக் காணப்படும் முடியிருக்கும் தலையமைந்த முகத்தைப் பாருங்கள். உங்களுக்குப் புரியும்.

முடியானது கேரேடின் (Keratin) என்ற ஒருவித புரோட்டின் சக்தியினால் உருவாக்கப்படுகிறது. தலையை மூடியுள்ள அந்தத் தோல் பகுதியிலிருந்து போலிகில் (Follicile) என்ற தலையோட்டின் பகுதியில் இருந்துதான் முடி முளைத்து வெளிவருகிறது. இப்படி முளைக்கின்ற முடியானது ஒரு மாதத்திற்கு 1.25 சென்டி