பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மீட்டர் உயரம் வளர்கிறது. அப்படி வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் உதிர்ந்துபோகின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் முளைக்கின்ற முடியானது 1,50,000 வரை திரட்சியாக வளருகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

உங்களுக்கு தலைமுடி எந்த வண்ணத்தில் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும். அப்படி வந்து விடாது. கருப்பா - வெளுப்பா - வெள்ளையா - செம்பட்டையா என்ற வண்ணங்களை மிலானின் (Melanin) என்ற பொருள்தான் நிர்ணயிக்கிறது.

உங்கள் முடியானது அலை அலையான சுருள் முடியாகவோ, அல்லது விரைப்பாக நிற்கும் கோரை முடியாகவோ, சீவினால் படிந்து கொள்கிற பதமான முடியாகவோ கூட அமைந்திருக்கும். உங்கள் தலையில் தோல் பகுதியில் முடி வளர்கின்ற இடத்தின் தன்மைக்கேற்பவே, முடியும் உருவாக்கப்படுகிறது.

ஆகவே, நீங்கள் முடியை வளர்க்கலாம். வெட்டிக் கிராப் செய்து கொள்ளலாம். தினமும் குளித்துச் சுத்தம் செய்யலாம். அதற்கு வண்ணப் பூச்சும் பூசிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பியவாறு கூட முடியை வளர்த்து முடிந்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் முடிக்கு எந்தவிதமான சிக்கலும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபோதுதான். உங்கள் முக அழகு மிடுக்காகத் தோற்றமளிக்கும்.

எண்ணெய்ப் பசையுள்ள முடி பளபளத்துத் தோற்றமளிக்கும். முடிகளில் பல வகை உண்டு. உங்கள்