பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

73


பாதிக்கப்பட்டுவிடும் என்பதால், அப்படியே சிறிது நேரம் விட்டு விடுங்கள். உள்ளுறும் கண்ணிர் அவற்றை வெளியேற்றிவிடும். இல்லையேல் டாக்டரின் ஆலோசனையைக் கேட்டுக் கண்மருந்துச் சொட்டுக்கள் போட்டுக் கொள்ளுங்கள்.

கடுமையான களைப்புக்கு ஆளாகிறபொழுது அல்லது கடுமையான ஜலதோசம் பிடித்திருக்கிற பொழுது, அல்லது உண்ட உணவினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுகிற பொழுது. ஒரு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். மூக்கடைப்பு ஏற்படும். கண்கள் பஞ்சடைந்ததுபோல ஆகிவிடும். மூக்கில் சளி ஒழுக ஆரம்பித்து விடும்.

நீங்கள் உரிய மருந்தை எடுப்பதற்குமுன், நீங்கள் தேவையான நேரம் தூங்கினீர்களா? சரியான உணவைச் சாப்பிட்டீர்களா? என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்களைக் குளிர்ச்சிப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். சாதாண டீத்துள் பையையோ அல்லது வெள்ளரிக்காயை சிறிது அறுத்து வைத்தோ கண்களுக்கு இதம் சேர்க்கலாம்.

சில சமயங்களில் இரண்டு கண்களால் ஒன்றைப் பார்த்தாலும் அதில் வித்தியாசம் காண்பார்கள். மாறுகண் வந்துவிட்டால் முகத்தையே விகாரப்படுத்திவிடும். வேறுசில சமயங்களில் கண்பகுதிகள் பாதிக்கப்பட்டுக் கண் கட்டிகள் கூடவரலாம். அதனை எல்லாம் கண் மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.