பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கண்களுக்கு உரிய கண்ணாடிகளைத் தேர்ந்து எடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாகத் தேர்ந்து எடுக்க வேண்டும். உங்கள் முகவடிவத்திற்கு ஏற்றாற்போல அழகான கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

3. செவிகள்:

முகத்தின் பக்கவாட்டில் இருபுறமும் தெரிகிற காதுகள். கேட்பதற்கு மட்டும் பயன்படும் புலன் அல்ல. கவர்ச்சியான முக அழகைத் தருவதற்கும் அவை பயன்படுகின்றன.

மனிதன் எப்பொழுதாவது காதுகளைப் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றானே தவிர, காதுகள் எப்போதும் தம் கடமையைச் செய்து கொண்டுதான் வருகின்றன. காதுகளை நாம் கவனித்தாலும். கவனிக்காவிட்டாலும், நினைத்தாலும் அல்லது நினைக்காமற் போனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவைகள் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

நீங்கள் ஒரு இசையைக் கேட்கின்றீர்கள். இரசிக்கிறீர்கள். மகிழ்ச்சியாக தலையை அசைக்கிறீர்கள். ஆடுகிறீர்கள். பாடுகிறீர்கள். எல்லாம் காதுகள் கொடுக்கிற விலைமதிக்கமுடியாத கொடையாகும்.

நீங்கள் இசையைக் கேட்கும்பொழுது நீங்கள் ஒலி எழுப்புகின்ற அதிர்ச்சியைத் தான் கேட்கின்றீர்கள் (Vibrations). அதாவது ஒலி அலைகள் காற்றிலே மிதந்து வந்து உங்கள் காதுக்குள்ளே நுழைகின்றன. உங்களது