பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

77


ஏறத்தாழ 120 டெசிபெல் சத்தத்தை ஒருவர் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவரது காதுகள் நிச்சயமாக செவிடாகிவிடுகின்றன. மேளவாத்தியம். மிலிட்ரி ட்ரம்ஸ் போன்றவற்றிலிருந்து எழுகிற சத்தத்தின் அளவு 130 டெசிவேல் என்கிறார்கள்.

ஆக, நீங்கள் காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் முக அழகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

4. பற்கள்:

உணவைக் கடித்து அரைத்து வயிற்றுக்குள்ளே அனுப்புகிற வேலையைத்தான் பற்கள் செய்கின்றன. இது பொதுவான பணிதான் என்றாலும். முகத்திற்கு முத்தான அழகை மிகுதியாகத் தருவது பற்கள்தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.

பற்கள் என்பவை எதனால் ஆக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு பல்லானது பல அமைப்புக்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்லின் வெளிப்புற அமைப்பானது கடினமான வெண்மையான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பளபளப்புப் பூச்சுக்குப் பெயர் (Enamel) என்பதாகும். அதன் உள்ளடுக்காக அமைந்திருப்பது எலும்பு போன்ற ஒரு பொருள். அதன் பெயர் டென்டைன் (Dentine).

பல்லின் நடுப்பாகம் மென்மையான திசுக்களால் ஆக்கப்பட்டு இருக்கின்றன. அதனைப் பல்ப்பு (Pulp) என்பார்கள். அதனுள்ளே இரத்தக் குழாய்களும், நரம்புகளும் சென்று உயிரோட்டமான உணர்ச்சி