பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாய் முகத்தில் இருப்பதற்குப் பதிலா வயிற்றிலிருந்தால் எப்படியிருக்கும்?

அந்த வாயிலும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நீண்ட வாள்களைப் போலிருந்தால் எப்படி இருக்கும்? அகோரமாகத்தானே இருக்கும்.

கண், காது, பற்கள் என்பனவற்றோடு, வாயையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். வாய் பேசுவதற்கு மட்டுமல்ல. பேரழகை முகத்திற்குக் கூட்டுவதற்கும், வெளிக்காட்டுவதற்கும் உறுதுணையாகவே அமைந்திருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விடக்கூடாது.

‘வாய் கிழியப் பேசுகிறான்’ என்கிறோம். வாயைக் கிழித்துக் காட்டுவது இரு உதடுகளேயாகும். ஒன்று மேல் உதடு. இரண்டாவது கீழ் உதடு. இந்த உதடுகள் கூட முகத்திற்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும். சிலருக்கு உதடுகள் வீங்கி, விரைத்து, பெருத்து கருத்துக் காணப்படும். இப்படிப்பட்ட இதழ்களை முகத்தில் பெற்று இருப்பவர்களுக்கு முக அழகா இருக்கும்? முக விலாசமே, முகவிகாரமென்றுதானே ஆகிவிடும்.

நோய் என்றால் துன்பம், வாய் என்றால் வழி வாய் தான் அத்தனைக்கும் வழி என்பார்கள். அனுபவப்பட்டவர்கள் பேச்சுக்கும் அதுதான் காரணம். சொல் வீச்சும், பேச்சுக்கும் வாய்தான். செயல் வீச்சுக்கும் வாய்தான். பலப்பல நேரங்களில் மூச்சுக்கும் வாய்தான் வழியாக இருக்கிறது. அது படுத்துகிற பாடுதான் அகோரமாக விளங்குகிறது.