பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

87


ஜப்பானியர்களுக்குச் சப்பை மூக்குகள். நம் நாட்டிற் கூட, பிறக்கும் குழந்தைகட்கு மூக்குகள் சப்பையாக இருந்தால், விரல்களால் தினந்தோறும் மூக்கை நீவி விட்டுச் சரிசெய்து விடுகிறார்கள். முகத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ப மூக்கு இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் முக அழகு மாறித்தான் போய்விடும். எனவே உங்கள் மூக்கையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முகத்தின் எழிலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நம் நாட்டுப் பெண்கள் மூக்குக் குத்திக் கொள்கிறார்கள். மூக்குத்திகளை, வைரக்கற்களைப் பதித்துக் கூடத் தங்கத்தில் அணிந்து கொள்கிறார்கள். பெண்களின் காதுகளில் மட்டுமல்ல, மூக்குகளிலும் விதவிதமான அணிகலன்கள் அழகு சேர்க்க அணியப்பட்டு வரக்காண்கிறோம். சப்பை மூக்கைக் கூடத் தற்காலத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்து விடுகிறார்கள். முகத்தின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், மூக்கின் மேலும் அக்கரை காட்டத்தான் வேண்டும்.

இதுவரை முகத்தின் அழகிற்கு உரிய சிற் சில விளக்கங்களை உங்கள் முன்வைத்தேன். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்?” என்பது பழமொழி.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
தடுத்தது காட்டும் முகம்”

சினம், காமம், பகை, பாசம், அன்பு, ஆசை, வெறுப்பு, விருப்பு, தவிப்பு, துடிப்பு, நகைப்பு என்று எல்லாவிதக்