பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குணங்களையும் முகம்தான் காட்டி மனிதனை வகைப்படுத்துகிறது. ‘புன்னகை பூத்த பூமுகம்’ என்கிறோம். ‘மாசற்ற மலர் முகம்’ என்கிறோம். அதே நேரத்தில் சிலர் முகத்தைப் பார்த்து, மறைமுகமாகக் கோரமுகம், விகாரமுகம் என்றெல்லாம் விமர்சிக்கிறோம்.

கைகேயி இராமனிடம் “அயோத்தியின் அரசுரிமை பரதனுக்கே உனக்கில்லை” என்கிறாள். இதைக் கேட்டபின் இராமன் முகம் கோபத்தால் அல்லவா சிவந்திருக்க வேண்டும். பின்னர் எப்படி இருந்ததாம். கம்பன் கூறுகிறான்.

“தெம்மடங்கிய சேண் நிலம், கேகயர்
தம்மடந்தை உன் தம்பிய தாம் எனா
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள்.”

மும்மடங்கு அழகாக இருந்ததாம் இராமனின் திருமுகம்.

“மெய்திருப்பதம் மேவு என்ற போதினும்
இந்திருத்துறந்து ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

இத்திருத் துறந்து கானகம் ஏகென்ற சொன்னபோது கூட இராம பிரானின் முகம் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்ததாம். ஆகவே, துன்பத்திலும், துயரத்திலும் கூட மலர்ந்த முகத்தோடு, வருத்தப்