பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இம் மூன்று செயல்களையும் சற்று விரிவாகக் காண்போமே. முக அழகிற்கும் உணவு முறைகளுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். உடலிலே ஒரு உறுப்பாக இருப்பதுதானே முகம். “எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பார்கள், சிரசு என்று சொல்லப்படுகின்ற தலையில் தானே முகம் அமைந்திருக்கிறது. எனவே உடலுக்குக் கூறப்படும் ஆலோசனைகளும், முகத்திற்கும் உரித்தானவைகள்தானே. எனவேதான் இங்கே உடலுக்குச் சக்தியை அளிக்கின்ற உபகரணமாகவே உணவு உதவுகிறது.

அதாவது ஓடுகின்ற நீராவி எஞ்சின் அல்லது கார் முதலியவற்றை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம். நீராவி எஞ்சினுக்கு நீரும், நிலக்கரியும், உல்லாசமாக ஓடுகின்ற காருக்குப் பெட்ரோலும் உணவுபோலத் தேவைப்படுகின்றன.

இவையில்லாவிட்டால், அந்த இரண்டும் இடம்விட்டு நகராது. அப்படிப்பட்ட தன்மையில்தான் உடலை இயக்கும் முக்கிய சூத்ரதாரியாக உணவு நமக்கு உதவுகிறது.

இனி உணவு எப்படி உடலுக்குச் சக்தியாக மாறுகிறது. என்ற முறையையும் நாம் அறிந்து கொள்வது மிகமிக அவசியமல்லவா.

நடக்க, பேச, நினைக்க, படிக்க என்பன போன்ற அன்றாடக் கடமைகளுக்கு நமக்குச் சக்தி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட செயல்களைச் செய்து