பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

91


முடிக்கின்ற சக்தி உணவாலும், உயிர்க் காற்றாலும்தான் உருவாகிறது.

நாம் உண்ணும் உணவிலே உள்ள கார்போஹைடிரேட்டுக்கள், கொழுப்பு, புரோட்டின் போன்ற சத்துக்கள், நாம் உள்ளே இழுத்துப் பெறுகின்ற பிராண வாயுவினால் தூளாக்கப்படுகின்றன.

அதாவது உணவும் காற்றும் சேர்ந்து நமது உடலுக்கு வேண்டிய சக்தியை உண்டாக்குகின்றன. உணவுடன் உடலில் சுரக்கின்ற சில அமிலங்களுடன், காற்றும் சேர்ந்து கொண்டு, அங்கு ஒரு புதிய மாற்றத்தை உடலுக்குள் ஏற்படுத்தி, சக்தியாக வெளிப்படுத்துகின்றன.

நாம் உண்ணுகிற உணவை உடல் சேர்த்து வைத்துக் கொள்ளும். ஆனால் நாம் சுவாசிக்கின்ற காற்றை மட்டும் உடலால் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது.

நமது தேவைக்கு மேலே சக்தி தருகின்ற உணவை நாம் உட்கொண்டு விட்டால், சேகரித்த சக்தியினை செலவழித்ததுபோக, மீதியைச் சேர்த்து வைத்துக் கொள்கிறது நமது உடல் இதேபோல, ஆக்ஸிஜன் என்கிற உயிர்க்காற்றை உடலில் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் சுவாசித்தல் தொடர்ந்து செய்யப்படுகிறது. உணவு இரண்டு மூன்று முறை உண்ண நேரிடுகிறது.

உணவு, இரசாயன மாற்றம் பெற்று உருவாக்குகிற சக்தி, உடலுக்கு வெப்பம், இயக்கம், மின்சார இயக்கம்