பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

93


அதிக சக்தியை அளிக்கும் ஆற்றல் கொழுப்புச் சக்திக்கு உண்டு. இந்தக் கொழுப்புச் சக்தியானது, மாமிசவகைகள், பால், பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளில் அதிகமாகக் கிடைக்கிறது.

இந்தக் கொழுப்பானது, உடலுக்கு சக்தி அளிக்கிற நீண்டகால சேமிப்பாக விளங்குகிறது. இந்த சக்தி செல்களின் அடிப்படை இயக்கத்திற்கும், நரம்புகளின் நுண் இயக்க ஆற்றலுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது.

புரோட்டீன் என்பது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத சக்தியாகும். மிருகங்கள் மூலமாகக் கிடைக்கின்ற உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக இருக்கிறது. காய்கறி, பால், கீரை போன்றவற்றில் குறைந்த ஆற்றலுடன் இது இருக்கிறது.

அடுத்து நமக்குத் தேவைப்படுவன வைட்டமின்களாகும். வைட்டமின்களில் பல வகைகள் இருக்கின்றன. அவைகள் தங்கள் திறமைக்கேற்ப பற்பல பணிகளை ஆற்றுகின்றன.

இயங்கும் உறுப்புக்களுக்கு வழவழப்புத் தன் மையூட்டும் (எண்ணெய்) பசைத் தன்மையை உண்டாக்கும் ஒருவகைப் பணியை வைட்டமின்கள் செய்கின்றன.

வைட்டமின்கள் A, B, C, D, E, K என்று இருக்கின்றன. A வைட்டமின் நலம் சார்ந்த தோல் வளத்திற்கு உதவுகிறது. முகத்தோலுக்கும்தான்.