இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறுதி கொள்வீர் எண்சீர் விருத்தம் I முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனேடு மிகுமினிமை காலஞ் சொல்ல அமையாத பழங்தொன்மை, தனித்தி யங்கி உதவுகிலே, வளர்பண்பும், எளிமை யாவும் உயர்தனிச்செங் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! 2 தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்ருல் கலங்குகின்ருர் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர் : புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் - புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின் மானம் நலங்கெட்டுப் போவதுவோ ? தமிழே இந்த நாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்! 140