பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கடிபேய்-அஞ்சத்தக்க பேய் (அச்சம்) கடியரண்-சிறந்த அரண் (சிறப்பு) அம்புகடிவிடுதும்-அம்பை விரைவில் விடுவோம் (விரைவு) கடி காற்று-மிகுந்த் காற்று (மிகுதி) கடிமணம்-புதுமணம் (புதுமை) கடிமுரசு-ஒலிக்கும் முரசு (ஆர்த்தல்-ஒலித்தல்) கடி மது-நீக்கத்தக்க மது (வரைவு-நீக்குதல்) கடி வினே-திருமண வேலை (மன்றல்-திருமணம்) கடி மிளகு - கரிக்கின்ற மிளகு (கரிப்பு-காரம்) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் கடி என் தனும் ஒர் உரிச்சொல் காப்பு, கூர்மை, காற்றம் விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு என்ற பதின்மூன்று குணத்தையும் உணர்த்தி வர்த பலகுனர் தழுவிய ஒர் உரிச்சொல்லாகும். இலக்கண விதி : கடி என்னும் உரிச்சொல் காவலும், கூர்மையும், வாசனையும், விளக்கமும், அச்சமும், சிறப்பும், விரைவும், மிகுதியும், புது மையம், ஒலித்தலும், நீக்கலும், மணமும், கரிப்பும் ஆகிய பதின் முன்று குனங்களிலும் வரும். கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி குைம். (ந-நூற்பா 457.)