பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 என நிகழ்காலத்தால் கூறினும் அமையும். (உற்றதுரைத்தல்-தனக்கு நேர்ந்ததைக் கூறுதல்.) 7. உறுவது கூறல் விடை: "சாத்தா இரவு விழிப்பாயா?’ என்ற வின விற்குக் கண் கோகும்’ என்று விடை கூறுதல் உறுவது கூறல் விடை எனப்படும். (உறுவது கூறல்-தனக்கு இனி கேரக்கூடியதைக் கூறுதல்.) 8. இனமொழி விடை: 'சாத்தா பேன உளதா?’ என்ற வினவிற்குப் ‘பென்சில் உண்டு என்று விடை கூறுதல் இன மொழி விடை எனப்படும். இவ் விடை வகைகளுள் சுட்டு விடை, மறை விடை, கேர் விடை முன்றும் வினவிற்கு ஏற்ற விடைகளாகும். ஏவல் விடை, விதைல் விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்ற ஐந்தும் விடைப்பொரு ளைக் குறிப்பால் தருவனவாகும். இவ்வைந்துள், வினதல்விடை ஒன்றும் உடன்பாட்டுப் பொருளை யும், ஏனைய நான்கும் எதிர்மறைப் பொருளையும் தரும். இலக்கண விதி: சுட்டும், எதிர் மறுத்தலும், உடன்படலும், ஏவுதலும், எதிர் வினவுதலும், உற்றதுரைத்தலும், உறுவது கூறலும், இனத் தைச் சொல்லுதலும் என, விடை எட்டு வகைப் படும். அவற்றுள் இறுதியாக உள்ள ஐந்தும், அவ் விடைப் பொருளைத் தருதலினல் விடை களாகவே தழுவிக்கொள்வர்.