பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கட்டு மறைநே ரேவல் விளுதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. (ந-நூற்பா 386.} 3. அடைமொழி - பொருள் கோள் (1) அடைமொழி வெண்டாமரை - வெண்டிங்கள் வெண்டாமரை (வெண்மை + தாமரை) என்ற தொடரில், வெண்மை என்பது நிறத்தையும், தாமரை என்பது பூவையும் குறிக்கும் சொற்களா கும். தாமரைப்பூவில், செந்தாமரை வெண்டாமரை என்ற இரண்டு வகை உண்டு. அவற்றுள் செக்தா மரையை நீக்கி வெண்டாமரையைக் குறிப்பதற்கு வெண்மை’ என்ற பண்புச்சொல் அடைமொழி யாக வந்துள்ளது. இவ்வாறு ஒன்றற்கு இனமான பிறவற்றை விலக்கிக் குறித்த பொருளேக் காட்ட வரும் சொல் அடைமொழி எனப்படும். இவ்வாறு வரும் அடைமொழி இனமுள்ள அடைமொழி' ஆகும. வெண்டிங்கள் (வெண்மை + திங்கள்) என்ற தொடரில், வெண்மை என்னும் பண்புச்சொல் திங் களுக்கு அடைமொழியாக வந்துள்ளது. வெண் டிங்களுக்கு இனமாகக் கருர் திங்கள் இல்லை. எனவே, "வெண்மை’ என்ற அடைமொ ழி, இங்கு, இனம் விலக்க வரவில்லை; திங்களின் சிறப்பைக்