பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இப்பாடலில், வங்கத்துச் சென்ருர் வரின், அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் மாமேனி தெங்கங் காப் போலத் திரண்டுருண்ட கோழி வெண் முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம்’ எனச் சொற்களை முன்னும் பின்னும் கொண்டுசவட்டிப் பொருள் கொண்டமையால், இது கொண்டு கூட் டுப் பொருள்கோளாகும். இக் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்கும், மொழிமாற்றுப் பொருள்கோளுக்கும் உள்ள வேறுபாடு வருமாறு: கொண்டுகூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் நின்ற சொற்களை முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண் டும். மொழிமாற்றுப் பொருள்கோளில், ஒவ்வோர் அடியிலும் கின்ற சொற்களே, அவ் வடிக்குள்ளே மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இலக்கண விதி: செய்யுளடிகள் பலவற்றினும், இயல்பாகிய ஆற்றுநீர்ப் பொருள்கோளுக்கு ஏலாது அமைந்து கிடந்த சொற்களை எடுத்து, அப் பொருளுக்கு ஏற்றவிடத்துக் கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள் கோளாகும். 3. தாப்பிசைப் பொருள்கோள் 'உண்ணுமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண - அண்ணுத்தல் செய்யா தளறு.' இத் திருக்குறளில், 'புலால் உண்ணுமை யாகிய அறத்திலேதான் உயிர் அடையும் கற்க தி: