பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புணர்ச்சி 1. பல, சில, பூ, தெங்கு, மரம், தேன் . இவற்றின் புணர்ச்சி 1. பல, சில என்னும் சொற்களின் புணர்ச்சி 1. பல - பல = பலபல 1. சில - சில = சில சில 2. பல - பல பலப் பல 2. சில - சில = சிலச் சில 3. பல - பல பற்பல 3. சில + சில = சிற் சில F = மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை கோக் குங்கள். 1. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, அவை பலபல, சில சில என இயல்பாகவும் புணரும். 2. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, அவை பலப்பல சிலச்சில என வல்லெழுத்து மிக்கும் புணரும். 3. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, கிலே மொழி ல வில் உள்ள அகரம் கெட கின்ற ல்-ற் ஆகத் திரிந்து பற்பல, சிற்சில எனவும் புணரும். == It. *