பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 இடையினம் வந்து புணரும்பொழுது, தேன்யாது என அல்வழியிலும், தேன்யாப்பு என வேற்றுமையிலும் இயல்பாகவே புணரும். இலக்கண விதி: தேன் என்னும் சொல்லின் முன் முவின மெய்களும் வர்து புணரும்பொழுது அல்வழி வேற்றுமை ஆகிய இருவழிகளிலும் இறுதி னகரம் இயல்பாதலும், மெல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெடுதலும், வல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெட்டு, வந்த வல்லினமாதல் அதற்கின மாதல் மிகுதலும் ஆம். 3 T தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. (த-நூற்பா 214.) 2. செய்யுள் விகாரம் 'தொட்டனைத் துாறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துாறு மறிவு.' இத் திருக்குறளில் தொட்டது, கற்றது என நிற்கவேண்டிய சொற்கள்,'தொட்டு, கற்று எனத் தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளன. இங்ாவனம் செய்யுளில் அடி, தொடை முதலானவைக2ள நோக்கிச் சொற்கள் பல விகாரங்களைப் பெற்று வரும். அங்ாவனம் வருவது செய்யுள் விகாரம் எனப்படும். செய்புள் விகாரம், வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்ற