பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 5. விரித்தல் விகாரம் வெதிரி னெல்விளை யும்மே” இத் தொடரில் விளையுமே” எனற்பாலது "விளையும்மே” என, இடையே ம் என்ற மெய் யெழுத்து விரிந்து விகாரப்பட்டுள்ளது. எனவே, இது விரித்தல் விகாரமாகும். 6. தொகுத்தல் விகாரம் சிறியிலை வெதிரினெல்' இத் தொடரில் சிறியவிலே’ எனற்பாலது "சிறியிலே’ என, யகர உயிர்மெய் தொகுத்தல் விகாரப்பட்டுள்ளது. எனவே, இது தொகுத்தல் விகாரமாகும். 7. முதற்குறை 'மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி' இத் தொடரில் தாமரை” எனற்பாலது “மரை” என முதல் எழுத்துக் குறைந்து கிற்கிறது. எனவே, இது முதற்குறை யாகும். 8. இடைக்குறை 'ஒதி முதுபோத்து' இத் தொடரில் ஒக்தி' எனற்பாலது ஒதி'என இடையில் உள்ள நகரமெய் குறைந்து கிற்கிறது. எனவே, இஃது இடைக்குறை யாகும். 9. கடைக்குறை 'நீலுண் டுகிலிகை கடுப்ப' இத் தொடரில் நீலம்' எனற்பாலது நீல்' எனக் கடைக் குறைந்துள்ளது. எனவே, இது கடைக குறை யாகும.