பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



3


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.

(நன்னுால்-நூற்பா 74.)

2. முதலெழுத்துக்களின் இடப் பிறப்பு
அமைச்சர்  —  ஆட்சி
கத்தரி வற்றல்
மூன்று சங்கம்
யாழ் நூல்

மேலே உள்ள சொற்களை ஒலித்துப் பாருங்கள். உந்தியிலிருந்து வரும் உதானன் என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன், அ-ஆ என்ற உயிர் எழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும்.

அக் காற்று, மார்பை அடைந்தவுடன் த்-ற் என்ற வல்லின மெய் யெழுத்துக்கள் பிறத்தல் தெரிய வரும்.

அக் காற்று, முக்கை அடைந்தவுடன் ன்-ங் என்ற மெல்லின மெய் யெழுத்துக்கள் பிறத்தல் தெரிய வரும்.

அக் காற்று, கழுத்தை அடைந்தவுடன் ழ்-ல் என்ற இடையின மெய் யெழுத்துக்கள் பிறத்தல் தெரிய வரும்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்.