பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வீழ்-புனல் = வீழ்புனல் இவ்வாறு,அல்வழி வினைத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். - (பண்புத்தொகை-மிகுதல்) கார்-பருவம்= கார்ப்பருவம் யாழ் + கருவி=யாழ்க் கருவி இவ்வாறு, அல்வழிப் பண்புத்தொகையில் LL」5叩。 J5J。 ழகர மெய்களின்முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (உவமைத்தொகை-மிகுதல்) வேய்-தோள்=வேய்த்தோள் கார்+ குழல்=கார்க்குழல் காழ் + படிவம்= காழ்ப்படிவம் இவ்வாறு, அல்வழி உவமைத் தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (யகரவிற்று வினையெச்சம்-மிகுதல்) போய் + கொண்டான்-போய்க்கொண்டான் இவ்வாறு, யகரவிற்று வினையெச்சத்தின்முன் வரும் வல்லினம் மிகும். (ரகரவிற்று வினையெச்சம்-இயல்பு) உண்ணியர் + போவான்=உண்ணியர்போவான். இவ்வாறு, ரகரவிற்று வினையெச்சத்தின்முன் வரும் வல்லினம் இயல்பாகும்.