பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 15 மார்கழி, தை-முன்பனிக் காலம் 6. மாசி, பங்குனி-பின்பணிக் காலம் சிறுபொழுது காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை எனச் சிறுபொழுது ஆறு வகைப்படும். 1. சூரியன் உதித்ததுமுதல் பத்து நாழிகை வரை (காலை 6 மணிமுதல் 10 மணிவரை) உள்ள நேரம் காலை’ எனப்படும். ר: 2. பகல் பத்து நாழிகைமுதல் இருபது நாழிகைவரை (10 மணிமுதல் 2 மணிவரை) உள்ள நேரம் கண்பகல்’ எனப்படும். 3. பகல் இருபது நாழிகைமுதல் முப்பது நாழிகைவரை (2 மணிமுதல் 6 மணிவரை) உள்ள நேரம் எற்பாடு’ எனப்படும். (எற்பாடு= எல்பாடு. எல் = சூரியன். பாடு-மறைதல்.) 4. சூரியன் மறைந்ததுமுதல் பத்து நாழிகை வரை (மாலை 6 மணிமுதல் 10 மணிவரை) உள்ள நேரம் மாலை’ எனப்படும். 5. இரவு பத்து நாழிகைமுதல் இருபது காழிகைவரை (இரவு 10 மணிமுதல் 2 மணிவரை) உள்ள நேரம் ‘யாமம்’ எனப்படும். (யாமம்=கள் ளிரவு.) 6. இரவு இருபது நாழிகைமுதல் சூரியன் உதிக்கும்வரை (இரவு 2 மணிமுதல் காலை 6 மணி வரை) உள்ள நேரம் வைகறை எனப்படும். (வைகறை= விடியற்காலம்.)