பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 2. கரந்தைத்திணை: பகைவர் கவர்ந்து சென்ற பகக்கூட்டங்களை மீட்டல். இதற்கு அடையாள மாகக் கரந்தைப் பூவைச் சூடுதல் மரபு. 3. வஞ்சித்திணை: பகைவருடைய நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுதல். இதற்கு அடை யாளமாக வஞ்சிப்பூவைச் சூடுதல் மரபு. 4. காஞ்சித்திணை: படை எடுத்து வந்த பகைவர், தம் காட்டினுள் நுழையாதபடி எதிர் சென்று தடுத்தல். இதற்கு அடையாளமாகக் காஞ்சிப் பூவைச் சூடுதல் மரபு. 5. நொச்சித் திணை: படை எடுத்து வந்த பகைவர், உள்ளே நுழையாதபடி தம் மதிலைக் காத்தல். இதற்கு அடையாளமாக கொச்சிப் பூவைச் சூடுதல் மரபு. 6. உழிஞைத்திணை: பகைவருடைய மதிலைச் சுற்றி வளைத்துக் கொள்ளுதல். இதற்கு அடை யாளமாக உழிஞைப் பூவைச் சூடுதல் மரபு. 7. தும்பைத் திணை: இருதிறத்துப் படைவீரர் களும் போர்க்களத்தில் எதிர்த்து கின்று அதிரப் போர் புரிதல். இதற்கு அடையாளமாக இருதிறத் தாரும் தும்பைப் பூவைச் சூடுதல் மரபு. (இரு திறத்து வீரரும் தத்தம் மன்னர்களுக்கே உரிய சிறப்புப் பூவுடன், வெட்சி முதலாய பூக்களைப் போர் நிகழ்ச்சிகளுக்கேற்ப உடன் சூட்டிக் கொள்வர்.) 8. வாகைத்திணை: பகைவரை வென்றவர், தம் வெற்றியைக் கொண்டாடுதல். இதற்கு அடை யாளமாக வாகைப் பூவைச் சூடுதல் மரபு.