பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



5

முயற்சிகளுள், அண்ணத்தின் தொழிலாகிய வாய் திறத்தலால் பிறக்கும்.


அவற்றுள்,-
முயற்சியுள் அஆ அங்காப் புடைய.

(ந-நூற்பா 76.)

(இ, ஈ, எ, ஏ, ஐ இவற்றின் முயற்சிப் பிறப்பு)

இலை, ஈட்டி, எருது, ஏணி, ஐந்து

இச் சொற்களில் உள்ள இ, ஈ, எ, ஏ, ஐ என்ற ஐந்து உயிரெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலுடன், மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரங்கள் பொருந்துதலாகிய முயற்சி வேண்டும் என்பது தெரியவரும்.

இலக்கண விதி: இ, ஈ, எ, ஏ, ஐ என்ற உயிரெழுத்துக்கள் ஐந்தும், வாய் திறத்தலுடன் மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஒரங்கள் பொருந்தும் முயற்சியால் பிறக்கும்.


இஈ எஏ ஐ அங் காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே.
(ந-நூற்பா 77.)

(உ, ஊ, ஒ, ஓ, ஒள இவற்றின் முயற்சிப் பிறப்பு)

உருண்டை, ஊசி, ஒன்பது, ஓடம், ஒளவை

இச் சொற்களில் உள்ள உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற ஐந்து உயிரெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப்பதற்கு உதடுகளைக் குவிக்கும் முயற்சி வேண்டும் என்பது தெரிய வரும்.