பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 மேற்கண்ட குறள்வெண்பாக்களில் முன்னது, ஒர் எதுகையால் (ஒரு விகற்பத்தால்) வந்துள் ளது. பின்னது, ஈர் எதுகையால் (இரு விகற்பத் தால்) வந்துள்ளது. இங்ங்னம், வெண்பாவின் பொது இலக்கண மெல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பத் தாலோ, இரு விகற்பத்தாலோ இரண்டடிகளால் வரும் வெண்பா, குறள் வெண்பா எனப்படும். (நேரிசை வெண்பா) (ஒரு விகற்பம்) கஞ்சி குடியாளே கம்பன்சோ றுண்ணுளே வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே நெஞ்சதனில் அஞ்சுதலை யாவருக்கு ஆறுதலை யாவாளே கஞ்சமுகக் காமாட்சி காண்.' (இரு விகற்பம்) :அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துண்ணுர் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று.' மேலே உள்ள இரண்டு கேரிசை வெண்பாக் களுள் முன்னது ஒரு விகற்பத்தால் வந்துள்ளது. பின்னது இரு விகற்பத்தால் வந்துள்ளது. நேரிசை வெண்பா, வெண்பாவுக்குரிய பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பமாயும், இரு விகற்பமாயும், இரண்டா மடியின் நான்காம் சீர் ஒரு உத்தொடை பெற்ற தனிச் சொல்லாக நிற்க, நான்கடிகள் பெற்று.