பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 பிறவகை இன்னிசை வெண்பாக்களே வந்த வழிக் கண்டு கொள்க. இன்னிசை வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு கான்கடியாய் வருவது இன் னிசை வெண்பாவாகும். 2. ஆசிரியப்பா (பொது) ஆசிரியப்பா, பெரும்பாலும் ஈரசைச்சீர்க2ள чнії, அச் சீர்களாலாகிய அளவடிகளையும் கொண்டு, அகவலோசை தழுவி, மூன்றடிச் சிறுமையும், பலவடிப் பெருமையும் உடையதாக வரும். ஆசிரியப்பா எனினும், அகவற்பா எனினும் ஒன்றேயாகும். இவ் வாசிரியப்பா, கேரிசை ஆ சிரியப்பா, கிலே மண்டில ஆசிரியப்பா, இனேக்குறள் ஆசிரி யப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என கான்கு வகைப்படும். (நேரிசை ஆசிரியப்பா) 'பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.' இது கேரிசை ஆசிரியப்பாவாகும். நேரிசை ஆசிரியப்பாவில் (ஈற்றயலடி) ஈற்றடிக்கு முக்திய அடி மட்டும் முன்று சீர்களைப் பெற்று வரும்.