பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தொழ விளங்குவதாலும், இருளே அகற்றுவ தாலும் ஒரு வகையில் இரண்டுக்கும் ஒப்புமை கூறப்பட்டுள்ளது; ஆனால், சூரியன் புற இருளைப் போக்கும் என்றும், தமிழ் அக இருளாகிய அறி யாமையைப் போக்கும் என்றும் கூறுவதால், பிறி தொரு வகையில் வேற்றுமை கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல் வேற்றுமையணியாகும். 3. இரட்டுற மொழிதல் (சிலேடை அணி) ஒரு வகையாய் கின்ற சொற்ருெடர் இரு பொருள் தருமாறு கூறுவது, இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும். இவ் இரட்டுற மொழித லுக்குச் சிலேடை அணி என்ற பெயரும் உண்டு. இச் சிலேடை அணி, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். 1. செம்மொழிச் சிலேடை ஒரே வகையாக கின்ற சொற்றெடர்கள், இரு பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்னும் அணியாகும். 'ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடும் குலைதனக்கு நாணுது-சேடியே! தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு.' (இப்பாடல், தேங்காய்க்கும் நாய்க்கும் சிலேடை) தேங்காய்: மேலோட்டைப் பெற்றிருக்கும்; அதன் உட்பகுதி வெண்மையான பருப்பைப் பெற் றிருக்கும்; அனைவராலும் விரும்பப்படும்; குலை யில் காய்த்திருப்பதற்குக் கோனது.