பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 2. முன்வந்த பொருளே பின்னும் பலவிடத் தும் வருமாயின், அது பொருட்பின்வருங்லை யணி’ எனப்படும். 3. முன்வந்த சொல்லும் பொருளும் பின் னும் பலவிடத்தும் வருமாயின், அது 'சொற். பொருட் பின்வருங்லேயணி எனப்படும். 1. சொற்பின்வருகிலையணி 'மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் - மாலிருள் சூழ் மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்ருெடுக்கு மாலையின் வாளி மலர்.' இப்பாடலில்,'மால்’, ‘மாலை என்ற முன்வந்த சொற்களே பின்னும் பலவிடத்தும் வந்துள்ளன. எனவே, இது சொற்பின்வருங்லையணியாகும். 2. பொருட்பின்வருகிலையணி 'அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை-மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை.' இப் பாடலில், அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்த என்னும் சொற் கள் மலர்ந்தன என்னும் ஒரே பொருளில் திரும் பத் திரும்ப வந்துள்ளன. எனவே, இது பொருட் பின்வருநிலையணியாகும்.