பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



7

முயற்சியாலும், ட், ண் என்ற இரண்டு மெயப்யெழுத்துக்களும் நுனி நாக்கு மேல்வாயின் நுனிப் பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும் பிறக்கும்.


கஙவும் சஞவும் டணவும் முதலிடை
நுனிநா அண்ண முறமுறை வருமே.

(நன்னுால்-நூற்பா 79.)

(த, ந-இவற்றின் முயற்சிப் பிறப்பு)

சத்தம் சந்தம்

இச் சொற்களில் உள்ள த், ந் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும்.

இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சியால், த், ர் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.

அண்பல் அடிநா முடியுறத் தநவரும்.

(நன்னுால்-நூற்பா 80.)

(ப, ம இவற்றின் முயற்சிப் பிறப்பு)

அப்பா அம்மா

இச் சொற்களில் உள்ள ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேலுதடும் கீழுதடும் பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும்.

இலக்கண விதி: மேலுதடும் கீழுதடும் பொருந்தும் முயற்சியால் ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.