பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 றர். கழகச் செயலாளர் கன்றி கூற நாட்டுப் பண்ணு டன் கூட்டம் இனிது கிறைவெய்தியது. (ஆ) மதுரை நகராட்சி உயர்நிலைப் பள்ளி (செய்ை நகர்)யில் 20-6-67 செவ்வாய்க்கிழமை யன்று வள்ளுவர் விழா நிகழ்ந்தது. அவ்விழாவிற்குப் பண்டாரகர் திரு. அ. சிதம்பரங்ாதன், எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள், தலைமை தாங்கினர்கள். மான வர் அறிவுடைநம்பி இறை வணக்கம் பாடக் கூட்டம் தொடங்கியது. மாணவர் தலைவர் கூட்டத்திற்கு வருகை தந்த அனேவரையும் வரவேற்றர். தலைவர், வள்ளுவப் பேராசானின் வாய்மை மொழிகளே உலக வழக்குடன் ஒப்பிட்டு உணர்த்தினர். சிறப்புப் பொழிவு நிகழ்த்திய திரு. தமிழண்ணல், எம்.ஏ., அவர்கள் * மாணவர் கெஞ்சில் வள்ளுவர் என்ற பொருள் குறித் துப் பேசிர்ை. மாணவர் மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் கூட்டம் முடிந்தது. 2. வருனனைக் கட்டுரைகள் கம்முடைய காட்சிப் புலத்தால் உணரப்பட்டு உள்ளதை உள்ளவாறே வருணித்து உரைத்தலே வரு னனைக் கட்டுரைகளாகும். அவை ஆறு, கடல், காடு, மலை முதலிய இயற்கைப்பொருள்கள் பற்றியும் அமைக் கப்படலாம்; கல்லோவியங்களாகத் திகழும், மாமல்ல புரம், காஞ்சீபுரம், மலைக்கோட்டை, செஞ்சிக்கோட்டை போன்றவற்றைப் பற்றியும் எழுதப்படலாம்; வரலாற் றுப் புகழ்பெற்ற வளாகர்களைப் பற்றியும் வருணிக்கப் படலாம். கடற் செலவுகள் வான்வழிச் செலவுகள், விண்வெளிச் செலவுகள் ஆகியவை பற்றியும் எடுத்து மொழியப்படலாம்; இவை யாவும் வருணனைக் கட் டுரையின் பாற்படும்.